தமிழ்நாடு (Tamil Nadu)

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் இனி வாகனங்கள் பறிமுதல்- அதிரடி உத்தரவு

Published On 2024-06-06 14:34 GMT   |   Update On 2024-06-06 14:34 GMT
  • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.
  • மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கு ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும்.

அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இனில் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கு ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Tags:    

Similar News