தமிழ்நாடு

பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற இளம் பெண்ணை படத்தில் காணலாம்.

உலக நன்மைக்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம்

Published On 2023-07-23 09:42 GMT   |   Update On 2023-07-23 09:42 GMT
  • கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.
  • பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர்.

திருவண்ணாமலை:

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம்.

அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முன்பு வழிபட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற இளம் பெண் அதிகாலை உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.

இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர். 

Tags:    

Similar News