தமிழ்நாடு

குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

Published On 2024-06-05 06:22 GMT   |   Update On 2024-06-05 06:22 GMT
  • ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
  • சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து குற்றால சீசன் களைகட்டும்.

ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் போதுமான அளவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கி உள்ளது.

கடந்த 3 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும்.

Tags:    

Similar News