தமிழ்நாடு
2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
- கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு.
- அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.
தமிழகம் முழுக்க வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடரந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கினர்.
கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது, அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.