சென்னையில் 6 இடங்களில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம் - அன்னதானம்
- திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சென்னை:
அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் சென்னையில் 6 இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காட்டுப்பாக்கம், போரூர், திருமழிசை, மாங்காடு ஆகிய இடங்களில் அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் தலைமையில், பொதுச்செயலாளர் வைரவன் முன்னிலையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காட்டுப்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பூந்தமல்லி வட்டார நாடார் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.எல்.லட்சுமணன் தலைமையில், அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் முன்னிலையில் பூந்தமல்லியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய நாடார் மகாஜன சபை பொருளாளர் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் வி.பி.விஜய், காப்பாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஏ.பி.துரை, மாநில செயலாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், வேல் குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ராஜகனி, மாநில இளைஞர் அணி தலைவர் மைக்கேல்ராஜ், மாநில இளைஞர் அணி துணை தலைவர் தினேஷ் பாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அபி, மாநில கலை பிரிவு செயலா ளர் பிரகாஷ், சென்னை மண்டல செயலாளர் கமலஹாசன், கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, மாநில உதவிக் குழு செயலாளர் ஆனந்தபாலன், மாநில தற்காப்பு பிரிவு செயலாளர் சரவணன், தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சேவியர், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விக்கி, காட்டுப்பாக்கம் பகுதி செயலாளர் சுந்தரகுமார், கவுரவ ஆலோசகர்கள் காந்தி மனகரன், அய்யா துரை, மதுரவாயல் தொகுதி தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.