இந்தியா
- கபிணி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது.
கர்நாடகா:
கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 884 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 3ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.