கருணாநிதி நூற்றாண்டு விழா: ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
- 194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா தலைமையில் நடைபெற்றது.
- தி.முக. பிரதிநிதிகள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194- வது (அ) வட்ட தி. மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈஞ்சம்பாக்கம் 194 - வது (அ)வட்ட செயலாளர் குங்பூ எஸ். கர்ணா,194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும் 15 - வது மண்டல குழு தலைவருமான வி.இ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 160 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ. 3000 ஊக்கத்தொகை, 2500 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பை, 25 சாலை வியாபாரிகளுக்கு நிழற்குடை, 5 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்,5 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மாவட்ட துணை செயலாளரும் சென்னை மாநகராட்சி கல்வி குழு தலைவருமான த.விசுவநாதன், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் தாஸ், ராஜா, தியாகராஜன் மற்றும் வட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஜி.சங்கர், எ.முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.