தமிழ்நாடு
வீட்டுச்செலவு கணக்குகளையும் பராமரிக்க வேண்டும்- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வலியுறுத்தல்
- புதுச்சேரியில் தணிக்கைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- கணக்குகளை முறையாக பராமரிப்பது அவசியமானது.
புதுச்சேரி அரசின் அலுவலக தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி கையாளும் அதிகாரிகளுக்கான கணக்குத் தணிக்கை நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆடிடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கணக்குகளை முறையாக பராமரிப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.
முறையாக பராமரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், வீட்டுச்செலவு கணக்குகளையும் பராமரிக்க வேண்டுமென்று கூறினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தணிக்கைத் துறை பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்ற பேரவைத் தலைவர் செல்வம், பொது கணக்குக் குழுத் தலைவர்கே.எஸ்.பி.ரமேஷ், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.