தமிழ்நாடு

மாநில பாடத்திட்டத்தின் தரம் பற்றி விமர்சித்த கவர்னர்- அமைச்சர் பதிலடி

Published On 2024-09-02 07:05 GMT   |   Update On 2024-09-02 07:05 GMT
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயன்பெறுகின்றனர்.
  • PM Sri புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினாலும் கமிட்டி அமைத்து விசாரிப்போம்

சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்ற கே.டி.சி.டி பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக பாடத்திட்டத்தின் தரம் பற்றி விமர்சித்த தமிழக கவர்னருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

* மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் உள்ளது.

* 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயன்பெறுகின்றனர்.

* மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களே 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பாடப்புத்தகங்களை தான் படிக்கின்றனர்.

* நூலகத்தில் ஆய்வு செய்ய சென்றபோது அரசுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே மாநில பாடத்திட்டத்தை பாராட்டுகின்றனர்.

* கவர்னர் என்னோடு எந்த நூலகத்திற்கு வேண்டுமானாலும் வரலாம். அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை சந்தித்தால் உண்மை புரியும்.

* PM Sri புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினாலும் கமிட்டி அமைத்து விசாரிப்போம். கமிட்டி அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம்.

* சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விடவும் மேலானது மாநில பாடத்திட்டம், இதனை கமிட்டி அமைத்து விசாரித்தால் கவர்னரும் புரிந்துகொள்வார் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News