அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் அடைப்புகள் இருந்ததால் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்காக 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பல் மருத்துவம், காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.