தமிழ்நாடு
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 பேர் நியமனம்
- மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
- அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள்.
சென்னை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்களாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனி வேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி மீனா ஆகிய 5 பேரை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மே 23-ந்தேதி மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள். அறங்காவலர்கள் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.