தமிழ்நாடு

முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Published On 2023-04-03 12:37 IST   |   Update On 2023-04-03 12:37:00 IST
  • முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பொன்னேரி:

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராசன் தலைமையில் மீஞ்சூர் அடுத்த பட்ட மந்திரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் திமுக நிர்வாகிகள் பகலவன் தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், சி.எச் சேகர், உமா மகேஸ்வரி, செல்வசேகரன் மணிபாலன், ருக்குமனிமோகன்ராஜ் அத்திபட்டு எம்.டி.ஜி கதிர்வேல், பா.செ. குணசேகரன், ஸ்டாலின், பாஸ்கர் சுந்தரம், வழக்கறிஞர் தேவேந்திரன், அன்புவாணன், சுப்பிரமணி, வல்லூர்தமிழரசன், கோளூர் கதிரவன், தமிழ் உதயன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News