தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை தருகிறார்- எ.வ.வேலு பேச்சு

Published On 2023-03-19 05:32 GMT   |   Update On 2023-03-19 05:32 GMT
  • பணக்காரர், ஏழை வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதை செயல்படுத்துவது தான் இந்த அரசு.
  • பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.

சென்னை:

குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் படப்பை ஊராட்சி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா படப்பை பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன் சிறப்புரையாற்றினார்கள்.

அமைச்சர் எ.வ. வேலு பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்துவதாக தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். பணக்காரர், ஏழை வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதை செயல்படுத்துவது தான் இந்த அரசு.

திராவிட மாடல் ஆட்சியில் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடிந்தது. தமிழகத்தில் பசி ஆற்றும் தாயார் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் படிப்படியாக கட்சி பதவிக்கு வந்து ஆட்சியை பிடித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படியா வந்தார். 10 வருடம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார்கள். உணவு உற்பத்தியை பெருக்க எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 210 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி சாதனை படைத்து விட்டார். காலை சிற்றுண்டி உள்பட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News