தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக ஆட்சியில் 1,400-க்கும் அதிகமான கோவில்களுக்கு குடமுழுக்கு: மு.க.ஸ்டாலின்

Published On 2024-07-31 06:07 GMT   |   Update On 2024-07-31 06:27 GMT
  • கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்தில பல தொகுதிகளில் புதிய காவல்நிலையம் அமைய உள்ளது.
  • கோவில்களுக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை கொளத்தூரில் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி வளாகத்தில் அறநிலையத்துறை கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கல்விக்கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

* கல்லூரி மாணவர்களிடம் பேசும்போது உற்சாகம் பிறக்கிறது.

* கொளத்தூர் வந்தாலே புது எனர்ஜி வந்துவிடுகிறது.

* கொளத்தூர் மட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதியாகவே பார்க்கிறேன்.

* கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்தில பல தொகுதிகளில் புதிய காவல்நிலையம் அமைய உள்ளது.

* முடிந்தளவுக்கு 10 நாளுக்கு ஒரு முறையோ, வாரத்திற்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு வந்து செல்கிறேன்.

* அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* திமுக ஆட்சியில் 1400-க்கும் அதிகமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

* கோவில்களுக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* விருப்பு வெறுப்பின்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

* ஓட்டுப்போடாத மக்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி நல்லது செய்து வருகிறது என்று கூறினார்.

Tags:    

Similar News