தமிழ்நாடு (Tamil Nadu)

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-02 06:29 GMT   |   Update On 2024-08-02 10:13 GMT
  • தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர்.
  • அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு செல்வதால் சமூக பொருளாதார மாற்றம் வரும்.

சென்னை:

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயில செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், மடிக்கணினி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* அண்ணாவின் பெயர் கொண்ட நூலகத்தின் தமிழ்நாட்டின் அறிவு கண்களான மாணவர்களுக்கு பாராட்டு விழா. பாரதிதாசன் இப்போது உயிரோடிருந்தால் மாணவர்களை ஓங்கிடும் கீர்த்தி எய்திவிட்டீர்கள் என பாராட்டியிருப்பார்.

* மாணவர்கள் உயர்ந்தால் ஆசிரியர்களுக்கும், குழந்தைகள் உயர்ந்தால் பெற்றோர்களுக்கும் பெருமை.

* தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர்.

* 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

* ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மனதார பாராட்டுகிறேன்.எதிர்கால சொத்துக்களை உருவாக்கி சமூகத்திற்கும் நாட்டிற்கும் அளித்துள்ளீர்கள்.

* மாணவர்களின் அறிவாற்றல் உலகிற்கே பயன்பட உள்ளது. உலகின் அறிவியல் சொத்தாக உள்ள மாணவர்களை பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது.

* 10 ஆண்டுக்கு பின் அதிக மாணவர்கள் உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில செல்கின்றனர்.

* புதுமை பெண் திட்டத்தின் பயனாக கல்லூரியில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

* தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் திறனை நவீனமயமாக்கியது பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு.

* உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்.

* அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும் கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் பயில உள்ளனர்.

* நான் முதல்வன் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான வினாத்தாள்கள் வெளியிடப்பட்டது.

* தேசிய சட்ட பயிற்சி நிலையம், விண்வெளித்துறையின் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

* உலகின் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை முதல் பயண செலவை அரசே ஏற்கும்.

* வாய்ப்பு கிடைத்தால் எந்த உயரத்தையும் எட்டிபிடிப்பர், விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்களே இனி ஆட்சி செலுத்துவர்.

* அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு செல்வதால் சமூக பொருளாதார மாற்றம் வரும்.

* உயர்கல்வி பயில வரும் எங்கள் மாணவர்களை காக்க வேண்டுமென தைவான், மலேசிய நாட்டு தூதர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளேன்.

* அறிவாற்றல் இருந்தால் எந்த தடையையும் வெல்லலாம் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News