குற்றால அருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
- கனமழையால் மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
- வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலரியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்நிலையில், நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி மாயமானான்.
தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.