நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழா: சீர்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்தார்
- அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனை செய்தார்.
- விழாவில் சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை:
நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில் மணி தலைமையில் நடைபெற்ற நவராத்திரி இசை விழாவை சீர்காழி டாக்டர். சிவசிதம்பரம் பாடி தொடங்கி வைத்தார்.
அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனை செய்தார். குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் அன்னை பாலா ஆன்மீக குடும்பங்கள் "குடும்ப விருத்தி பூஜை" நடைபெற்றது. விழாவில் சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரி கொலு திறக்கப்பட்டது.
சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயராஜ், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ரமணா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகள் "பால மோகி" சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா முடிவில் செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.