தமிழ்நாடு
24 மணி நேரமும் செயல்படும் என்.டி.ஆர்.எஃப். மையம்
- ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்பட உள்ளது.
- 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
திருநெல்வேலியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் பிராந்திய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.
கூடங்குளம் ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன மீட்பு உபரகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் மையம் செயல்பட்டு வருகிறது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநில பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கதிரியக்கம், ரசாயனம், உயிரியல் உள்ளிட்டவை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.