தமிழ்நாடு
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
- ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது.
1500 ஆண்டுகள் பழமையான இந்த பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.
இந்த பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
அதன்படி, திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், 10ம் நாளான வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய பணிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட்.10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.