தமிழ்நாடு (Tamil Nadu)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்- அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2024-10-06 06:14 GMT   |   Update On 2024-10-06 06:14 GMT
  • தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், 5,146 ஏக்கர் நிலமும் என மொத்தம் 9,760 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
  • அக்டோபர் மாதம் 2-ந் தேதி தண்ணீர் திறந்திருக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் உள்ள அணைகளிலிருந்து ஆங்காங்கே உள்ள கால்வாய்களில் குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அந்த வகையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 2-ந் தேதி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.

பதினெட்டாம் கால்வாயில் 4,614 ஏக்கர் நிலமும்; பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், 5,146 ஏக்கர் நிலமும் என மொத்தம் 9,760 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

எனவே, விவசாய மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News