தமிழ்நாடு

JEE நுழைவுத்தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ்-ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு

Published On 2024-05-11 13:00 GMT   |   Update On 2024-05-11 13:00 GMT
  • JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும்.

JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்கலாம். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "இந்தியாவின் மதிப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் வாய்பை நிறைவேற்ற, JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

லட்சக்கணக்கான சம்பளத்துடன் 11.5 லட்சம் வேலைவாய்ப்பு நிறைந்த தரவு அறிவியல்(Data Science) பட்டப்படிப்பையும், மின்னனு துறையில் தரம் வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கும் மிண்ணணு அமைப்புகள் (Electronic Systems) பட்டப்படிப்பையும் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த மாணாக்கர்களை உருவாக்க சுய கற்றல் முறையில் இணையதளம் மூலமாக படித்து, நேரடியாக தேர்வுகளை எதிர்கொண்டு 4 வருட ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்பினை பெறலாம்.

தகுதித் தேர்வின் அடிப்படையில் BS பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் படிக்கும் காலத்திலேயே வேறு ஒரு கல்லூரியில் தங்களது விருப்பமான பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே BS பட்டப்படிப்பினை பயிலலாம்.

இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும். தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள், மற்றும் கல்வித்தகுதியை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

பதிவு செய்ய : http://lnkiy.in/iitdegree

TAHDCO : https://iei.tahdco.com/iit_reg.php

மேலும் பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு

Data Science-study.itm.ac.in/ds

Electronic Systems-study atm.ac.in/es

குறிப்பு - விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே 20. 2024

tamilnaduvolunteers@gmail.com

9087293339

Tags:    

Similar News