தமிழ்நாடு
பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
- செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.
இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது.
இந்நிலையில் திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.