தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரியம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகள்- தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 1,030 பேரின் பட்டியல் வெளியீடு

Published On 2022-08-01 02:55 GMT   |   Update On 2022-08-01 02:55 GMT
  • தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 15 பாடப்பிரிவுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 16, 17, 18 மற்றும் 20-ந் தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்டது.

சென்னை:

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தியது. இதற்கான கணினி வழி தேர்வு கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடந்தது. தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 15 பாடப்பிரிவுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் (ஜூலை) 16, 17, 18 மற்றும் 20-ந் தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வர்கள் பெற்ற எழுத்து தேர்வு மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையில், இடஒதுக்கீடு, விதிகளின்படி தற்காலிகமாக தகுதியுடையவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாதம் 22-ந் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், புரொடெக்சன் என்ஜினீயரிங், பிரிண்டிங் தொழில்நுட்பம், கருவிமயமாக்கல் மற்றும் கட்டுப்பாட்டு (இன்ஸ்ட்ருமென்டேசன்) என்ஜினீயரிங் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு தகுதியான 23 பேரின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மீதம் உள்ள வேதியியல், இயற்பியல், கணிதம், ஆங்கிலம், சிவில் என்ஜினீயரிங் உள்பட 10 பாடப்பிரிவுகளுக்கு தகுதியான 1,007 பேரின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

Tags:    

Similar News