தமிழ்நாடு

8 மணிக்குள் சான்று பெறவில்லை என்றால் கார் பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டும்- நீதிமன்றம் அதிரடி

Published On 2024-08-31 11:39 GMT   |   Update On 2024-08-31 11:43 GMT
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
  • ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ்.

பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயம் சான்று பெற 8 மணி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவு 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

9 மணி வரை அவகாசம் வழங்கும்படி அரசு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில், 8 மணி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் பந்தயத்தை காண வந்துள்ளதால் 8 மணிக்குள் சான்று பெற வேண்டும் என்றும் சான்றின் நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க வேண்டும் னெ்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News