தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு- தமிழ்நாட்டை விட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு
- தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு.
- 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்டை மாநிலமான ஆந்திரா அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.