தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 13-ந் தேதி முதல் கிடைக்கும்...
- தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக சான்றிதழ் வினியோகிக்கப்படும்.
- 11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா நிருபர்களிடம் கூறியதா வது:-
தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து வழங்குவதற்கு சிறிதுகால அவகாசம் தேவைப்படும். அதுவரையில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழக்கம் போல வினியோகிக்கப்படும்.
11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக சான்றிதழ் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இணை இயக்குனர்கள் நரேஷ் செல்வக்குமார் உடனிருந்தனர்.
தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையுடன் பெற்று கொள்ள வேண்டும். அரசு, மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அனைவரும் திங்கட்கிழமை முதல் தற்காலிக சான்றிதழை பெறலாம்.