திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து பெண்கள்-குழந்தைகள் காயம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
- இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.
இந்த பழைய பேருந்து நிலையம் சுமார் 20 வருடத்திற்கும் முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், சின்னாலம்பாடி பகுதி சேர்ந்த சரசு இவரது மகள் குமாரி மற்றும் 5 மாத குழந்தை புவனேஷ். மற்றும் அவரது உறவுக்கார பெண்ணான சுபத்ரா மற்றும் 9 மாத கைக்குழந்தை தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பொன்னேரி பகுதியில் உடல்நிலை சரியில்லாத காரணத்திற்க்காக தாயத்து கட்டிக்கொண்டு மீண்டும் திருவள்ளூர் பேருந்தும் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு இருக்கும் சிமெண்ட் இருக்கையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அமர்ந்த போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து சரசு, குமாரி. சுபத்திரா ஆகியோர் மீது விழுந்துள்ளது இதில் சரசு கையில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தைகள் புவனேஷ் மற்றும் தக்சன் ஆகியோர் கண்களில் சிமெண்ட் கற்கள் சிதறி விழுந்தன. இதனால் கண் எரிச்சலால் குழந்தைகள் அலறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு ள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் இருந்து எந்த நேரத்தி லும் மேற்கூரை பெயர்ந்து விழலாம் என்ற அச்சத்தில் பயணிகள் உறைந்துள்ளனர். எனவே உடனடியாக திருவள்ளூர் நகராட்சியினர் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.