தமிழ்நாடு

அனுமதியின்றி பேனர் அச்சடித்துக் கொடுத்தால்... எச்சரிக்கை விடுத்த கடலூர் ஆட்சியர்

Published On 2023-11-17 11:29 GMT   |   Update On 2023-11-17 11:29 GMT
  • அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • அனுமதியின்றி பேனர் அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர்:

அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது. அத்துடன், விதிமீறலினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட எல்லையில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அனுமதியின்றி பேனர், செண்டர் மீடியனில் நோட்டீஸ் ஒட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News