ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
- தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
- மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுதிரி மற்றும் ரெயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என ரெயில்வே அதிகாரிகள் தண்டவாளப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பாகமதி விரைவு ரெயிலை லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் ராமவதார் மீனா ஆகியோர் இயக்கிச் சென்றுள்ளனர்.
டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் லூப் லைனில் நின்றி கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.