தமிழ்நாடு
ராமஜெயம் கொலை வழக்கு: 3-வது நாளாக ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை
- ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- நேற்று முன்தினம் தொடங்கிய உண்மை கண்டறியும் சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது
சென்னை:
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது. இன்று ரவுடிகள் சாமிரவி, மாரிமுத்து, சிவா உள்ளிட்டோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.