தமிழ்நாடு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2023-12-17 08:57 GMT   |   Update On 2023-12-17 08:57 GMT
  • குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
  • விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.

பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.

3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

Tags:    

Similar News