தொடர்மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்
- வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது.
- மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உப்பள உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று 14 தேதி 11 செ.மீ மி.மீட்டா் மழையும், இன்று காலை 8 மணி வரை 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.
வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன் பள்ளி கோடியக்காடு கடிநெல் வயல் ஆகிய பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி கடந்த வாரம் வரை நடைபெற்ற உப்பு உற்பத்தி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இனி மழை காலம் முடிந்து பிப்ரவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்ற 10 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளனர். தொடர்ந்து விட்டு விட்டுமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தி ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டு உள்ளது.