தமிழ்நாடு

கொரோனா தொற்று பரவல்: பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்- சரத்குமார் வேண்டுகோள்

Published On 2023-12-26 07:44 GMT   |   Update On 2023-12-26 07:44 GMT
  • உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.

சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜேஎன்1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்று உலகமெங்கும் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் நேற்று 4 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப் பட்டதாகவும், கர்நாடக மாநிலத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் வெளிவரும் செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவலின் மொத்த பாதிப்பு 4000-ஐ கடந்து அதிகரித்தாலும், ஜேஎன்1 வைரஸ் வீரியம் குறைவு தான் என்றும், பாதிக கப்பட்டவர்களுக்கு உடல்நலம் குன்றி காணப்படுகிறதே தவிர உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"வருமுன் காப்போம்" என்ற அடிப்படையில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தமிழ்நாட்டில் ஜேஎன்1 உருமாறிய புதியவகை கொரோனா பரவாமல் கட்டுக்குள் வைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News