தமிழ்நாடு (Tamil Nadu)

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ் ஏட்டு ஜெகநாதன்.

திருப்பூரில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த போலீஸ் ஏட்டு பணி நீக்கம்

Published On 2023-05-12 05:40 GMT   |   Update On 2023-05-12 05:40 GMT
  • வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
  • அதிகபட்ச தண்டனையாக ஏட்டு ஜெகநாதனை பணிநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.

திருப்பூர்:

திருப்பூரை அடுத்த அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த வாசுகுமார் என்பவரை, ஜெகநாதன் தனது வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக அவர் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

காவல்துறைக்கு கெட்ட பெயர் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் அதிகபட்ச தண்டனையாக ஏட்டு ஜெகநாதனை பணிநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News