வேட்பாளர் பட்டியல் என வெளியான செய்தி போலி... தமிழக பா.ஜனதா
- கரூரில் அண்ணாலை போட்டி, தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் என செய்தி வெளியானது.
- மொத்தம் 14 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது செய்தி என வெளியிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அண்ணாமலை மற்றும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதாவில் தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது போல் செய்தி வெளியானது. அந்த செய்தியில் தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் விஜயதாரணி போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மொத்த 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த செய்தி போலியானது. தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என தமிழக பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.