தமிழ்நாடு

இன்று தமிழ்நாடு தினம்- மாவட்ட தலைநகரங்களில் மாணவர்கள் பேரணி, புகைப்பட கண்காட்சி

Published On 2023-07-18 04:05 GMT   |   Update On 2023-07-18 04:05 GMT
  • “தமிழ்நாடு தினம்” குறித்து பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
  • இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறும்.

சென்னை:

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தினம் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, "தமிழ்நாடு தினம்" குறித்து பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியில் மாணவ-மாணவிகள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச்செல்வார்கள்.

அதேபோன்று "தமிழ்நாடு தினம்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18-ந்தேதி (இன்று) முதல் வருகிற 23-ந்தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறும். அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்கிறார்கள்.

சென்னை, மாநிலக் கல்லூரியில் 18-ந்தேதி (இன்று) நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அமைச்சர்கள் கலந்துகொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பின்னர், தமிழ்நாடு தினம் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு தினம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News