தமிழ்நாடு

மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை- சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு

Published On 2023-09-17 03:47 GMT   |   Update On 2023-09-17 04:47 GMT
  • தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.
  • தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் அண்ணாமலை.

விழுப்புரம்:

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோலியனூரில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாவை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. கூட்டணியில் இருந்து கொண்டு தரம் தாழ்ந்து பேசுகிற அண்ணாமலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். அ.தி.மு.க. துணை இல்லாமல் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. மோடி மீண்டும் பிரதமராகுவதற்கு அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை. திட்டமிட்டே அண்ணாவை அண்ணாமலை இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார்.

அரசியலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடாதென தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார். அதனால்தான் தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் அண்ணாமலை.

உங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தன் இருப்பை காட்டிக்கொள்ள கூட்டணி தர்மத்தை மீறி பேசிக்கொண்டிருக்கிறார். எங்களை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அ.தி.மு.க.விற்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் முக்கியம். அண்ணாமலை கூட்டணியை பிரிக்க வேண்டுமென்று கங்கனம் கட்டி பேசிகொண்டிருக்கிறார். அண்ணாமலையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமையிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News