தமிழ்நாடு

கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

Published On 2023-03-05 08:38 GMT   |   Update On 2023-03-05 08:38 GMT
  • கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.
  • சிறப்பு கேமிராக்கள், பைனாகுலர்கள், ஒலிஅறியும் கருவிகள் கொண்டு கணக்கெடுப்பு பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறையினர் கூறினர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி 20 இடங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. கிரேஹெட்டட் கென்னடி பிளேகேட்சிங், ஆரஞ்சு பிளைகேட்சிங், யுரேசியன்பிளாக் பேர், நீலகிரி பிளைகேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட்ஐ, பழனி லாபிங்திரஸ், ரஸ்டிடைல்டு பிளைகேட்சர் உள்ளிட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன.

இந்த பறவைகள் அனைத்தும் பழங்களை உண்ணாது. பூச்சிகளை மட்டுமே உண்டு வாழக்கூடியதாகும். இமயமலையில் 4 வகையான மரங்கொத்திகள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகள் இதுபோன்ற அரியவகை பறவைகள் பாதுகாக்கப்படுகின்றனவா, இனப்பெருக்கம் எந்த அளவில் உள்ளது. வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதா என ஆய்வுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

20-க்கும் மேற்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகின்றது. சிறப்பு கேமிராக்கள், பைனாகுலர்கள், ஒலிஅறியும் கருவிகள் கொண்டு இந்த பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறையினர் கூறினர்.

Tags:    

Similar News