தமிழ்நாடு

சென்ட்ரல், எழும்பூரில் ரெயிலில் கஞ்சா கடத்திய 10 பேர் கைது

Published On 2023-05-17 08:35 GMT   |   Update On 2023-05-17 08:35 GMT
  • கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் ரெயில் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
  • ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரெயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு பொன்.ராமு கண்காணிப்பில் மற்றும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரெயில் நிலையங்களிலும் கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் ரெயில் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வட மாநிலங்களில் இருந்து விஜயவாடா, ரேணிகுண்டா, மார்க்கமாக தமிழகத்திற்கு வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை, மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Tags:    

Similar News