தமிழ்நாடு

தக்காளி விலையை கட்டுப்படுத்த அமைச்சர் பெரியகருப்பன் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை

Published On 2023-07-02 08:21 GMT   |   Update On 2023-07-02 08:21 GMT
  • தக்காளியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
  • தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை:

தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று தக்காளி விலை கிலோ ரூ. 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்காளியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனாலும் தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி மொத்த விலை கிலோ ரூ.100-க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனையில், தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்யலாமா என்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்படும்.

Tags:    

Similar News