தமிழ்நாடு

கவர்னர் ரவி பேச்சுக்கு எர்ணாவூர் நாராயணன் கண்டனம்

Published On 2023-04-07 06:47 GMT   |   Update On 2023-04-07 06:47 GMT
  • தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
  • தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னர் பதவியேற்ற முதலே தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகின்றார். ஆன்லைன் தடை சட்ட மசோதாவை கிடப்பில் போட்டு காலம் கடந்து திருப்பி அனுப்பி தனக்கு தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், உயிரிலும் அக்கறை இல்லை என்று நிரூபித்துள்ளார்.

இப்போது எந்த மசோதாவையும் தான் கிடப்பில் போட்டாலே அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று சொல்லியிருப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

மேலும் தற்போது தூத்துக்குடி பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அயல்நாடுகளில் பணம் பெற்றுக் கொண்டும், அயல் நாடுகளின் தூண்டுதலின் பேரிலேதான் நடத்தினார்கள் என்று கூறியிருப்பது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகளை கவர்னர் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த கவர்னரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் சமத்துவ மக்கள்கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News