தமிழ்நாடு
முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜர்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.
- வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச், மே மாதங்களில அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் சி.வி. சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.