தமிழ்நாடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-03-20 08:00 GMT   |   Update On 2023-03-20 08:02 GMT
  • காலநிலை மாற்ற வீராங்கனைகள் என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும்.
  • வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கு 1248 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்து உள்ள இந்த அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் "காலநிலை மாற்ற வீராங்கனைகள்" என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள்.

இதற்காக, அவர்களுக்கு 20 கோடி ரூபாய் செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கு 1248 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News