தமிழ்நாடு
தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமா... இனி கோயம்பேடு செல்ல வேண்டாம்...
- கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கம்.
வண்டலூர்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கும் கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்லும் தெரிவிக்கப்பட்டுள்ளது.