தமிழ்நாடு (Tamil Nadu)

ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2024-06-01 07:01 GMT   |   Update On 2024-06-01 07:01 GMT
  • கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
  • 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.

சென்னை:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள தேசிய நூலகத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகம் சென்றோம். 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.


தொடர்ந்து ஸ்காட்லாந்தின் மைய நூலகத்தையும், குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டோம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்

திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகமும் ஸ்காட்லாந்து நாட்டின் நூலகங்களைப் போலவே காலம் பல கடந்து சாதனையாளர்கள் பலரை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! என கூறியுள்ளார்.




Tags:    

Similar News