தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்கு குழாய் மூலம் குடிநீர்: அமைச்சர் கே.என்.நேரு

Published On 2023-10-11 07:03 GMT   |   Update On 2023-10-11 07:03 GMT
  • திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனையை நானும் அறிவேன்.
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம் (தி.மு.க.) கேள்வி ஒன்றை எழுப்பினார். மாதவரம் தொகுதிக்கு உள்பட்ட புழல் மற்றும் சோழவரம் ஏரிகள் முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்கின்றன. இருப்பினும், மாதவரம் தொகுதிக்கு உள்பட்ட அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை.

எனவே அப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் ஒன்று உருவாக்கப்படுமா? என்றார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனையை நானும் அறிவேன். அப்பகுதிக்கு குடிநீர் திட்டம் தேவையில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பணிகள் முடிந்த பின்னர் குழாய் மூலமாக திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் இருக்கிறது. அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News