தமிழ்நாடு

ஓ.பி.எஸ். அணியை கவிழ்க்க பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே போதும்- முன்னாள் அமைச்சர் பேச்சு

Published On 2022-12-23 05:42 GMT   |   Update On 2022-12-23 05:42 GMT
  • தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
  • அ.தி.மு.க. தொண்டர்களால் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

திருவாரூர்:

தமிழக அரசு அண்மையில் உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த அல்லல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் கூறி அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசியதாவது:-

தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மாறாக அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டனர்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது வைத்துள்ள தி.மு.க. அரசுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. குறித்து ஒ.பி.எஸ் பேசாதது ஏன்? இவரை எப்படி அ.தி.மு.க.வினர் ஏற்றுகொள்வார்கள்.

அ.தி.மு.க. தொண்டர்களால் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஓ.பி.எஸ். என்ன நாடகம் நடத்தினாலும் தொண்டர்களிடம் அது எடுபடாது.

தே.மு.தி.க, பா.ம.க. கட்சிகளில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது ஒ.பி.எஸ் உடன் இணைந்து எம்.ஜி.ஆர். கட்சியை காப்பாற்ற போவதாக கூறி வருகிறார். இவர் ஒருவரே போதும் ஓபிஎஸ் அணியை கவிழ்ப்பதற்கு. நிலைப்பு தன்மை இல்லாத பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News