ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு
- கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
எனவே மக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடையாமல் தங்களை பாதுகாத்து கொள்ள பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்போது கைகளை சுத்தமாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் மற்றும் காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து நலமுடன் வாழ வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.