தமிழ்நாடு

கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்- அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2023-06-30 10:12 GMT   |   Update On 2023-06-30 10:12 GMT
  • கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
  • நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 'இனி தொழில் செய்யவே முடியாது' என்ற நிலைக்கு வந்துள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரி அனுமதி பெற்றிருப்போர் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள், கடந்த 3 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்குக் காரணம், சரளைக் கற்கள் போன்ற சிறு கனிமத்திற்குகூட கனிமத் திட்டம் அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாகவும், இதுபோன்ற நிபந்தனைகளுடன் தொழிலை தொடர முடியாது என்றும், பெரிய கனிமத்திற்குத்தான் இது பொருத்தமாக இருக்கும் என்றும், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கல் குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்துப் பேசி அதற்கு ஒரு சுமூக தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News