தமிழ்நாடு
குடியாத்தம் அருகே அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்தது
- மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
- அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் மண்டி இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆலாம்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகள் பூவிகா (வயது 13). ஒலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார் .அப்போது கழிவறை அருகே பதுங்கி இருந்த பாம்பு அருகே தெரியாமல் சென்று விட்டார்.
அப்போது பாம்பு மாணவியை கடித்தது. இதனால் அலறி கூச்சலிட்டார்.
அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவியை மீட்டனர். உடனடியாக மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் மண்டி இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.